ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

.
ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களின் விற்பனை 3.5 சதவிகிதம் அதிகரித்து, சர்வதேச அளவில் 1,37,463 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 51,591 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவிகிதம் கூடுதலாகும். இதில் ஜாகுவார் கார்களின் விற்பனை 16 சதவிகிதம் அதிகரித்து 15,343 ஆக அதிகரித்துள்ளது. லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 9 சதவிகிதம் அதிகரித்து 36,248 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட இரண்டாம் நாள் முதலே இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலைகள் குறைந்து வருகின்றன. ஜூலை 2ஆம் தேதியே ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தங்களின் தயாரிப்புகளின் விலையைக் குறைப்பதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையைக் குறைப்பதாக அறிவித்து வருகின்றன. இதனால் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை மேலும் இந்தியாவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *