ஜி.எஸ்.டியை எதிர்த்து சென்னை சூளையில் கடை அடைப்பு போராட்டம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜி.எஸ்.டி., வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைமுறைக்கு ஒத்துவராத சட்டங்களை எதிர்த்து சென்னை வெட்டுமரம் மற்றும் ஒட்டுபலகை வணிகர்கள் ஒன்றியம் சார்பில் சென்னையில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். சென்னை சூளையில் உள்ள அப்பாராவ் கார்டனில் சுமார் ஆயிரத்து 200 வெட்டுமரம்
மற்றும் ஒட்டுப்பலகை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாளை முதல் இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருகிறது. இந்த வரிக்கு பல்வேறு வணிக தொழில் செய்யும் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வெட்டுமரம் மற்றும் ஒட்டுப்பலகை வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள்அடையாள கடையடைப்பு செய்து போராட்டம் நடத்தினர். இது குறித்து சென்னை வெட்டுமரம் மற்றும் ஒட்டுப்பலகை வணிகர்கள் ஒன்றிய தலைவர் பாண்டியன்செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நடைமுறைக்கு ஒத்துவராத சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதாகவும் ஜி.எஸ்.டி வரியினால் வணிகர்கள் மட்டும் அல்லாமல்
பொதுமக்களும் பாதிப்புக்குள்ளவார்கள் என்று தெரிவித்த அவர் வெட்டுமரம் மற்றும்ஒட்டுபலகைக்கு 5 சதவிகித வரியை போடவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இன்றைய வேலைநிறுத்தத்தால் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யாவிட்டால் தமிழகம் அளவில் மாபெரும்
போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *