ஜி.எஸ்.டி. முறை மூலம் 1 லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு

Comments (0) இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின் ஒரு லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் ஒரே சீரான மறைமுக வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜி.எஸ்.டி. முறை ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை அடுத்து சில்லறை வணிகம் முதல் பெரிய அளவிலான வணிகம் வரை அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.இதற்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி. மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்காக ஆட்களை பணியில் அமர்த்த வேண்டியது அவசியம்.எனவே வரித் துறை, கணக்கு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய பணியாளர் நியமன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.முதல் காலாண்டில் ஒரு லட்சம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பும், பின்னர் சிறிது காலத்தில் 50 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதால் ஆண்டுதோறும் 10 முதல் 13 சதவீதம் வரை வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும் என்றும் இந்திய பணியாளர் நியமன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *