ஜி.எஸ்.டி.யினால் உணவகங்களில் பொருட்கள் விலை உயர்வு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளதால், இதுவரை 2 சதவீதம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்ட ஏ.சி. இல்லாத உணவகங்களில் தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. உணவகங்களில் வசூலிக்கப்பட்டு வந்த சேவை வரி 8 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாகவும், மதுபான விடுதி அடங்கிய உணவகங்களில் வசூலிக்கப்பட்ட 20 சதவீத சேவை வரி தற்போது 18 சதவீதமாகவும் வசூலிக்கப்படுகிறது.இதனால், சென்னையில் உள்ள பிரபல உணவகங்களான சரவண பவன், வசந்த பவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், புஹாரி உள்ளிட்டவற்றில் இட்லி, தோசை மற்றும் பிரியாணி விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வசந்த பவனில் இதுவரை 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தோசை மற்றும் பூரி செட்டின் விலை தற்போது 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இட்லி செட் 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும், வடை விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், புஹாரி உணவகத்தில் இதுவரை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணி விலை தற்போது 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில உணவகங்களில் தரப்படும் பில்களில் மாநில ஜி.எஸ்.டி. 9 சதவீதம், மத்திய ஜி.எஸ்.டி. 9 சதவீதம் என பிரித்துக் காட்டப்பட்டு மொத்தம் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில உணவகங்களில் பில் எந்திரங்களின் மென்பொருளில் மாற்றம் செய்யாமல், வாட் வரி என்றே குறிப்பிட்டு, கூடுதல் வரி வசூலிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனிடையே, சென்னையில் உள்ள சாதாரண டீக்கடைகளிலும் டீ, காஃபி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீ தற்போது 10 ரூபாயாகவும், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட காஃபி 12 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பாலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேயிலை, காபி தூள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தால், விலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *