ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் வரும் 7 ஆம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் : விக்கிரமராஜா

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால் வரும் 7 ஆம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என குற்றஞ்சாட்டினார். சாமானியர்களை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், கடலை மிட்டாய்க்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை குறைக்க வேண்டும் என்று கூறினார். இதனை கண்டித்து வரும் 7 ஆம் தேதி மாநில அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *