ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் ஏழுமலையான் கோவில் பிரசாதம் விலை உயரும்

Comments (0) இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.images (3)மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் கோயில்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 லட்டு தயார் செய்ய தற்போது உள்ள மூலப்பொருட்களின் விலையின் படி 35 ரூபாய் செலவாகும் நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பிரசாதங்கள் தயார் செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 6 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் உள்ள அறைகளுக்கு .ஜி.எஸ்.டி. வரி நிபந்தனையின் படி கூடுதல் வரி வசூலிக்க நேரிடும். இதனால் திருப்பதியில் லட்டு மற்றும் அறை வாடகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *