ஜெயலலிதா என்னை வீட்டுக்காவலில் வைக்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜெயலலிதா என்னை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்று சசிகலா கணவர் நடராஜனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் கூறியுள்ளார்.சசிகலா கணவர் நடராஜன் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியின் போது, ஓ.பன்னீர் செல்வம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், சட்டசபை தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா அவரை வீட்டுக்காவலில் இருப்பது போல் வைத்திருந்தார். அது ஏன் என்று சொல்வாரா? ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில் இருந்தாரே? என்றார்.இதுபற்றி திருச்சி வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், நடராஜன் கூறியிருப்பது வடிகட்டிய பொய். ஜெயலலிதா என்னை வீட்டுக்காவலில் வைக்கவில்லை என்றார்.தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *