டிடிவி தினகரனுடன், 29-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

dinakaran_650x400_71492404358அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், 29-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர். தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், தோப்பு என்.டி. வெங்கடாச்சலம், பழனியப்பன், செந்தில்பாலாஜி, ராஜன் செல்லப்பா, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். மேலும், டிடிவி தினகரனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியின் கலைராஜன், தினகரனுக்கு ஆதரவாக 29 எம்.எல்.ஏக்கள் டிடிவி உள்ளனர் என அவர் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினர் என்று கூறிய கலைராஜன், ஆட்சி கவிழாது என தெரிவித்தார். இதனிடையே, டிடிவி தினகரனை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நிதியமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவித்துள்ளார். இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். கட்சி தொடர்பான முடிவுகளை பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மட்டுமே எடுப்பார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் போல் ஆட்சியை கலைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *