டிரம்ப் – லண்டன் மேயர் மோதல்

Comments (0) உலகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

_89646279_untitled-2அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – லண்டன் மேயர் சாதிக் கான் இடையேயான மோதல் போக்கு வலுத்து வருகிறது.
ஐரோப்பாவின் மேற்கு நாடுகளில் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக திகழ்பவர் லண்டன் மேயர் சாதிக் கான். அமெரிக்காவில் நுழைவதற்கு 7 இஸ்லாமிய நாடுகளுக்கு அந்நாட்டின் அதிபர் டிரம்ப் தடை விதித்த போது, அதை பகிரங்கமாக எதிர்த்த சாதிக் கான், டிரம்பை கடுமையாக விமர்சித்தார்.இதன் பின்னர் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. லண்டன் பாலத்தில் கடந்த சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை லண்டன் மேயர் அலட்சியப்படுத்தும் வகையில் செயல்படுவதாக டிவிட்டர் வாயிலாக டிரம்ப் சாடி இருந்தார்.இதற்கு பதில் அளித்துள்ள சாதிக் கான், டிரம்பின் பேச்சுக்கு பதில் அளிப்பதை விட முக்கியமான பணிகள் நிறைய இருப்பதாக கூறி உள்ளார். டிரம்பின் கருத்து, இஸ்லாம் மீதான அவரது அறியாமையை காட்டுவதாகவும் சாதிக் கான் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *