டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜனாதிபதி தேர்தலில் தினகரன் ஆதரவு எம்.பி-எம்.எல்.ஏக்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க மாநிலக் கட்சிகளிடம் கேட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.இந்த நிலையில், நேற்று மாலை இப்தார் நோன்பு முடித்த பின்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க அம்மா அணி ஆதரவு அளிக்கும்’, எனக் கூறினார்.இந்த நிலையில் ஓ.பன்னீர்ச் எல்லவ்ம் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் இன்று கிரீன்வேஸ் கார்டனில் அவரது வீட்டில் அவரது ஆதர்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்அதிமுக அம்மா அணியும் இரண்டாக உள்ளது. அதில் தினகரனுக்கு ஆதரவாக ஒரு அணியினர் இயங்கி வருகின்றனர். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 5 எம்.பிக்கள். 35 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அடையாறில் உள்ள ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *