டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு: விஜயகாந்த்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன் எச்சரிக்கையும் எடுக்காததன் காரணமாக இன்றைக்கு மக்கள் பாதிக்கப்படுகின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் ஓரிரு பகுதியில் மட்டும் சென்று பார்த்துவிட்டு, டெங்கு காய்ச்சல் இல்லை, இது மர்மக்காய்ச்சல், மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று ஊடகத்தில் பேட்டி கொடுத்து வருகிறார்.விஜயபாஸ்கர் வருமான வரித்துறையில் சிக்கியுள்ளதால், சொந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள மத்திய அரசை அனுவதிலையே கவனம் செலுத்துகிறார். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த போதிய நேரமில்லை.ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவதும், உயில் இழப்பதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணம் குப்பைக் கூலங்களை அகற்றாதது, சாக்கடை கழிவுகளை அகற்றாதது, கழிவு நீர்களை தேங்கவிடுவது மற்றும் நீர் நிலைகளை சுத்தப்படுத்தாதது போன்ற காரணங்களால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது.
இதை பராமரிக்க வேண்டிய சுகாதாரத்துறை, கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, கவனம் செலுத்தாததனால் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையுள்ளது.குறிப்பாக 2012ல் ஜெயலலிதா ஆட்சில் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதும், 66 பேர் உயிர் இழந்த சம்பவமும் நடந்தது. 2012ல் நடந்த சம்பவம் போல் மீண்டும் நடக்கா வண்ணம் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மெத்தனப் போக்கில் இல்லாமல், டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற முழுகவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *