டெல்லி செல்கிறார் – O. பன்னீர்செல்வம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்க, முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார்.ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க மாநிலக் கட்சிகளிடம் கேட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.இந்த நிலையில், நேற்று மாலை இப்தார் நோன்பு முடித்த பின்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க அம்மா அணி ஆதரவு அளிக்கும்’, எனக் கூறினார்.பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் அவருக்கு எங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ந்நிலையில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்க, முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *