தங்க நகை வரி உச்சவரம்பினை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயர்த்த கோரிக்கை

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தங்க நகை தொழிலில் பொற்கொல்லர்களுக்கான கூலிக்கு விதிக்கபட்டுள்ள ஐந்து சதவீத ஜி எஸ் டி வரியை நீக்கி முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். கூடுதல் வரி விதிப்பின் காரணமாக நகையின் எடை சவரனுக்கு நூறு மில்லி கிராம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். கோவையில் 20 லட்சத்துக்கு உட்பட்டு வருமானம் ஈட்டுவதால், ஜி.எஸ்.டி. பதிவிலிருந்து விலக்கு பெற்றாலும், பெரு நிறுவன ஜாப் ஆர்டரையோ, வங்கிக் கடனையோ ஜி.எஸ்.டி. பதிவெண் இல்லாமல் பெற முடியவில்லை என சிறு, குறு தொழில் செய்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அத்தகைய இடங்களில், ‘தாங்கள் 20 லட்சத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டுவதால் ஜி.எஸ்.டி. பதிவதிலிருந்து விலக்கு பெற்ற சிறு, குறு நிறுவனத்தினர்’ என்ற அடையாள ஆவணத்தை அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *