தமிழகத்தில் சிசேரியன் முறை அதிகரிப்பு!

Comments (0) இந்தியா, செய்திகள், மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியாவில் சிசேரியன் முறை அறுவை சிகிச்சைகள் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.சி-பிரிவு அறுவை சிகிச்சைகள் குறிப்பாகத் தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது என்றும் இது கவலையளிப்பதாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் கூறியுள்ளார். தனிப்பட்ட விருப்பம், ஆபத்து காரணி, நேரம் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் சிசேரியன் முறை அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர் இந்த முறையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.மத்திய அரசு சுகாதார சேவைகள் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, 31,496 பிரசவங்களில் 55 சதவிகிதம், அதாவது 17,450 சிசேரியன் முறை அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி(என்.எஃப்.எச்எஸ் -4) இந்தியா முழுவதும் கடந்த பத்து ஆண்டுகளில் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் இரட்டிப்பாகிவிட்டது. முக்கியமாக தெலங்கானா போன்ற மாநிலங்களில் சிசேரியன் முறை அதிகரித்துள்ளதாகவும், அதன்படி தெலங்கானாவில் 74.9சதவிகிதமும், பீகாரில் 40 சதவிகிதமும் மகாராஷ்டிராவில் 58 சதவிகிதமும், தமிழகத்தில் 34 சதவிகித குழந்தைகளும் சிசேரியன் முறையில் பிறந்துள்ளதாக தெரிவித்தது எனவே ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும், சிசேரியன் மற்றும் சுகப் பிரசவம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.என்றாலும் 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தேவையற்ற சிசேரியன் மூலம் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிப்புக்குள்ளாகின்றன. பருமன், இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் வருவதோடு அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகளும் ஏற்படும். கர்ப்பிணி பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே உடலை பாதிக்கும் சிஸேரியனை தவிர்ப்பது நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *