தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், சுகாதார பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில்,சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து இயக்குநர் எட்வின் ஜோ கூறுகையில், சென்னை மற்றும் பிற பகுதியிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அங்குள்ள ஆய்வகத்தில் டெங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில், 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.இதுபோன்று திருச்சியிலும் 30 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் அனிதா கூறுகையில், இங்கு காய்ச்சலுடன் 149 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 9 குழந்தைகள் உள்பட 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்,பெரும்பாலானோர் புதுக்கோட்டை, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதனால், இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கின்றனர். மேலும், 108 யூனிட் ரத்தம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.இதுபோன்று, திருப்பூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில், டெங்கு காய்ச்சலால் அழகு மீனா(8) என்ற சிறுமி நேற்று( ஜூலை 31) உயிரிழந்தார். மேலும், 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *