தமிழகத்தில் பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் பங்குகள்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தில் பத்து இடங்களில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அம்மா பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். R-Kamarajஉணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை அடுத்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் தமிழகத்தில் பத்து இடங்களில் ‘அம்மா’ பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட இருப்பதாக அவர் அறிவித்தார். நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான 10 இடங்களில் இந்த பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.இதன்படி சென்னை நந்தனம், திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், தஞ்சை மாவட்டம் இரும்புத்தலை, நாகை மாவட்டம் கோவில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ளிட்ட 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *