தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி ஊடுருவ வாய்ப்பே இல்லை-அமைச்சர் காமராஜ்,

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை என்ற நிலையே இல்லாதபோது, பிளாஸ்டிக் அரிசி ஊடுருவ வாய்ப்பே இல்லை என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் 2 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றிற்கு தமிழகத்தில் எப்போதும் இடமில்லை என்றும் ஒருவேளை மீறி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து பேசிய kamaraj_story-647_031417051553 மொத்தமுள்ள ஒரு கோடியே 91 லட்சம் குடும்ப அட்டைகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்தில் இப்பணி முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *