தமிழகத்தில் விரைவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்-வானிலை ஆய்வு மையம்

Comments (0) தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

met30414தமிழகத்தில் விரைவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. எஸ். பாலச்சந்திரன், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *