தமிழக மீனவர்கள் கைது 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக் கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற வகையில் எல்லை தாண்டும் மீனவர்களை தடுக்க இலங்கை அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகிற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலும் இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.அதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டிய முழு பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது. இதற்கு இலங்கை அரசு மறுக்குமேயானால் இந்திய- இலங்கை அரசுகளுக்கிடையே 1974, 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவு குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று மத்திய அரசு, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும்.பா.ஜ.க. ஆட்சி அமைந்து கடந்த 3 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் 150-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் இலங்கை கடற்கரையில் கேட்பாரற்று கிடக்கின்றன. மீனவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதை தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் தமிழக காங்கிரஸ் மீனவர் பிரிவு சார்பாக எனது தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 10-ந் (திங்கட்கிழமை) தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *