தமிழக வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

Comments (0) கலை, செய்திகள், தமிழ்நாடு, விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உலகக்கோப்பை வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று வரலாறு படைத்த தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கடந்த மே மாதம் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியான உலகக்கோப்பை வாள்வீச்சு தொடர் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனை பவானி தேவி சேபர் பிரிவில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் சர்வதேச வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி படைத்தார். தொடர்ந்து 2 மாதங்கள் வெளிநாட்டில் விளையாடிய பவானி தேவி இன்று நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் சாதனை படைத்த பவானி தேவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்.டி.ஏ.டி வீராங்கனைகள் உள்பட பலர் விமான நிலையத்திற்கு வந்து வீராங்கனையை வரவேற்றனர். பின்னர் பேசிய பவானி தேவி, வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் முதலாவது தங்கம் வென்றது அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும், 2020 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தமது இலக்கு என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *