தமிழன் தலையில் கோமாளிக் குல்லா இன்னும் வேண்டுமா? :கமலஹாசன்

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அதிமுக அணிகள் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், நடிகர் கமலஹாசன், ‘தற்போது தமிழன் தலையில் கோமாளிக் குல்லா. போதுமா இன்னும் வேண்டுமா?’என்று ட்விட்டரில் தனது விமர்சன சாட்டையை சொடுக்கியுள்ளார்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இன்று (ஆகஸ்ட் 21) ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தனர். இந்த அணிகள் இணைப்பு நிகழ்ச்சி அனைத்துத் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிமுக அணிகள் பிரிந்ததும், அணிகள் இணைந்ததும் பதவி, அதிகாரம், பணம் இவற்றை மையமாகக்கொண்டே நடைபெற்றது எனச் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.அணிகள் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “காந்திக் குல்லா! காவிக் குல்லா! கஷ்மீர் குல்லா! தற்போது, கோமாளிக் குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” என்று பதிவிட்டுள்ளார். அணிகள் இணைப்பு நிகழ்ச்சியை விமர்சிப்பதாகவே இந்தப் பதிவைப் பலரும் பார்க்கிறார்கள்.அண்மைக் காலமாக, தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் கமல், அணிகள் இணைப்பு தமிழன் தலையில் போடப்பட்ட கோமாளிக் குல்லா என்ற அர்த்தத்தில் விமர்சனம் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *