தமிழுக்கு பெருமை சேர்த்த கனடா…!

வட அமெரிக்க கண்டத்தில் இடம்பெற்றுள்ள கனடா நாட்டில் ஈழத் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதனால் தமிழர்களுக்கு அந்நாட்டில் சிறப்பு இடமுண்டு. தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவது,அறிவிப்புகளை தமிழில் வெளியிடுவது என கனடா அரசு பல்வேறு செயல்களை செய்து வருகிறது.இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மிகுந்த பெருமையாக கருதி வருகின்றனர். இந்த சூழலில் கனடா நாட்டின்150வது சுதந்திர தினம், வரும் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ், அரபி, பஞ்சாபி உட்பட 12 மொழிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளன.இதற்கு முன்பு, கனடா தேசிய கீதம் ஆங்கிலம்,பிரெஞ்சு மொழியில் மட்டுமே பாடப்பட்டு வந்தது. அந்நாட்டில் 12 மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Comments are closed.