தலைநகரம் அமைப்பதற்காக நிலங்களை அரசுக்கு வழங்கிய விவசாயிகள்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக உருவாக்கப்பட உள்ள அமராவதிக்காக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாமாக முன்வந்து விளை நிலங்களை அரசிற்கு வழங்கியுள்ளனர்.ஆந்திர பிரதேசம், தெலுங்கானா பிரிவினைக்குப் பின்னரும் இரண்டு மாநிலத்திற்கும் தலைநகரமாக ஐதராபாத் செயல்பட்டு வருகிறது. விரைவில் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக அமராவதி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மத்திய அரசு ஏற்கனவே 2500 கோடி ரூபாயை ஆந்திராவிற்கு வழங்கியுள்ளது. தற்போது கூடுதலாக 1000 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.‘தலைநகர உள்கட்டமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மேலும் இதற்கான நிலத்தை அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகள் தாங்களாக முன்வந்து அரசுக்கு வழங்கியுள்ளனர். இதனால் அமராவதியை மக்களின் தலைநகரம் என்று அழைக்கலாம்’ என அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர பிரேதச மாநிலத்திற்கான சட்டசபை கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 231 உறுப்பினர்கள் அமரக்கூடிய அளவிற்கு கட்டப்பட்டுள்ள சட்டசபை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு கட்டப்பட்டுள்ளது. மேலும் அமராவதி உலகத்தரம் வாய்ந்த நகரமாகவும், இந்தியாவின் முதல் தலைநகரமாகவும் திகழும் என முதல்வர் கூறினார்.தலைநகரத்தின் மொத்த பகுதியில் 30 சதவீதம் பூங்கா மற்றும் திறந்த வெளிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த டாடா என்ஜினீயரிங் என்ற நிறுவனம் நகரத்தில் அமைக்கப்படும் கட்டத்திற்கான திட்டத்தை வகுக்கிறது. ஜிஐஐசி நிறுவனத்தைச் சேர்ந்த ஹெச்.சி.படேல் நகரத்தை பசுமையாக வைப்பதற்கான திட்டத்தில் அரசிற்கு உதவிபுரிகிறார் என முதல்வர் இன்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *