தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் திடீர் ஆலோசனை

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை தலைமைச்செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டார்.அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.அதிமுக-வின் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியை வழி நடத்துவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ள நிலையில், இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.இன்று மாலை, சென்னையில் உள்ள அதிமுக-வின் கட்சி தலைமையகத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இதே போல், முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இல்லத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *