தாமிரபரணி தண்ணீரை ஆலைகளுக்கு வழங்க தடை கோரிய வழக்கு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ராகவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தாமிரபரணியில் இருந்து நாள்தோறும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை dc-Cover-7jsv8v2ka6ipv0631fk00m39i2-20160824065540.Mediஏற்பட்டுள்ளதாகவும், எனவே தண்ணீர் வழங்க தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. சிப்காட் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒப்பந்த அளவைவிட பாதி அளவே தண்ணீர் வழங்கப்படுவதாகவும், தற்போது வறட்சி காரணமாக அதையும் 10 விழுக்காடாக குறைத்துவிட்டதாகவும் கூறினர்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தண்ணீர் வழங்கவில்லை என கூறிவிட்டு, பெப்சி நிறுவனத்தை தவிர பிற நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தெரிய வந்துள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர் வழங்கும்போது, எந்த நேரத்திலும் அதை நிறுத்த அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *