தினகரனை சந்திக்க விரும்பாத- முதல்வர்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியுமான தளவாய்சுந்தரம் மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில், தினகரனை சந்திக்க விரும்பாததால், அவர் சென்ற பின், பங்கேற்றார்.தளவாய்சுந்தரத்தின் மகள் டாக்டர் பூர்ணிமா வின் திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை, வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்,நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர் பழனிசாமி, தினகரன் இடையே நடக்கும் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, இருவருக்கும் தளவாய் சுந்தரம் அழைப்புவிடுத்திருந்தார்.
இந்த விழாவில், தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், ராஜு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்டோர் பங்கேற் றனர்.தினகரனும், அமைச்சர்களும், முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், இரவு, 8:30 மணி வரையில், முதல்வர்பழனிசாமி வரவில்லை.அதேநேரத்தில், தினகரனுக்கு, ஈக்காட்டுதாங்கலில் நடந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரச ரின் மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருந்தது.அதனால், அவர் கிளம்பிச் சென்றார். அவரது காரில், அமைச்சர் ராஜு சென்றார். தினகரன் சென்ற தகவல் தெரிய வந்ததும், முதல்வர் வந்தார். பழனிசாமி யை யும், தினகரனையும் சந்திக்க வைக்கும் தளவாய்சுந்தரத்தின் முயற்சி, தோல்வியில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *