திருப்பதி கோயிலில் `தல’ தரிசனம்!

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார், தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும் சாமி தரிசனம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஏற்கனவே இதற்கு முந்தைய படங்களுக்கும் இதே பாணியையே கடைபிடித்து வந்தார். இந்நிலையில், தற்போது விவேகம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியுள்ள அவர், இன்று( ஜூலை18) காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று தரிசித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக பல்கேரியா உள்பட ஐரோப்பிய நாடுகளில் விவேகம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று காலை ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற அவர், காலையில் நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சாமி கும்பிட வந்திருந்த சில ரசிகர்கள் அஜித்துடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *