திருப்பதி லட்டுக்கு ஜி.எஸ்.டி.?

Comments (0) இந்தியா, சுற்றுலா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கும் லட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது என தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.திருமலை அன்னமயபவனில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டு பேசுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லட்டுகள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது என்றார்.மேலும் தங்க டாலர்கள் மீது 3 சதவீதமும், ஆயிரம் ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் வரை உள்ள தங்கும் விடுதிக்கு 12 சதவீதமும், 2,500 ரூபாய்க்கு மேற்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 18 சதவீதமும். ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
பக்தர்களுக்கு விரைவாக தங்கும் விடுதிகள் பெறுவதற்கு திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு அலுவலகத்தில் 10 கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது 12–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *