தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் – பிரதமர்

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மத்தியக் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்த சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைகின்றன.கஜகஸ்தானில் நேற்று தொடங்கிய ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பாயேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவையும் பிரதமர் மோடி சந்தித்தார். ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

New Delhi: Prime Minister Narendra Modi addressing at the launch of a new mobile app 'BHIM' to encourage e-transactions during the ''Digital Mela'' at Talkatora Stadium in New Delhi on Friday.  PTI Photo by Subhav Shukla (PTI12_30_2016_000126A)

New Delhi: Prime Minister Narendra Modi addressing at the launch of a new mobile app ‘BHIM’ to encourage e-transactions during the ”Digital Mela” at Talkatora Stadium in New Delhi on Friday. PTI Photo by Subhav Shukla (PTI12_30_2016_000126A)

பின்னர் நடைபெற்ற மாநாட்டில் தலைவர்கள் அனைவரும் உரையாற்றினர். இதில் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதம் மனித இனத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகத் தெரிவித்தார். தீவிரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்று வலியுறுத்திய அவர், நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாதவரை தீவிரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு, நிதியுதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இயலாத செயல் என்று தெரிவித்தார்.பருவநிலை மாறுபாட்டுப் பிரச்சினையில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *