துபாய்: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

துபாயில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான டார்ச் டவரில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.துபாயில் உள்ள மெரினா பகுதியில் சுமார் 1,105 அடி உயரம் கொண்ட, உலகில் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்று டார்ச் டவர். இங்கு 79 மாடிகள் உள்ளன. இந்த டவரில் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.கட்டிடத்தின் 9-ஆவது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்து எரிந்து அடுத்தடுத்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றினர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் மக்கள் இதுதொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, வைரலாக பரவி வருகிறது. தீ விபத்தால் அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.79 மாடிகள் கொண்ட டார்ச் டவர் கடந்த 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஏற்கனவே, பிப்ரவரி 2015-ஆ ஆண்டில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *