தூத்துக்குடி அருகே மாவட்ட சிறைச்சாலையை நேற்று கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தூத்துக்குடி அருகே பேரூரணியில்.தூத்துக்குடி அருகே பேரூரணியில் மாவட்ட சிறைச்சாலையை நேற்று கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.மாவட்ட சிறைச்சாலை தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியில் 10 ஏக்கர் பரப்பில் ரூ.12 கோடி செலவில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சிறைச்சாலை தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிளைச்சிறைகளில் இருந்து 67 கைதிகள் புதிய மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.கம்பி வேலிகள்
பின்னர் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:– தூத்துக்குடி மாவட்டத்துக்கான சிறை இதுவரை ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது, புதிதாக பேரூரணியில் மாவட்ட சிறை கட்டப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது. இந்த சிறையில் 200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. 130 ஆண்கள், 35 பெண்கள், 35 வளர் இளம் பருவத்தினரை அடைக்கும் வசதி உள்ளது. 40 சிறைக்காவலர்கள் இங்கு பணியமர்த்தப்படுகின்றனர். 16 அடி உயர பிரம்மாண்ட மதில் சுவர்களும் அவற்றின் மீது 4 அடி உயரத்துக்கு கம்பி வேலிகள், மின்சாரம் பாயும் தன்மையுடன் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் 4 புறங்களிலும் அதிநவீன ஒளிவெள்ளம் பாய்ச்சும் சுழலும் தன்மை கொண்ட விளக்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காணிப்பு கோபுரங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிறையின் உள்பகுதியிலும், வெளியிலும் 8 அதிநவீன கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இரவிலும் காட்சிகளை தெளிவாக பதிவு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *