தூத்துக்குடி மாவட்ட திமுக பொறுப்பாளர்களாக கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி மறைவெய்தியதாலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அ.சுப்பிரமணி அப்பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதாலும் இவ்விரு மாவட்ட கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெறும் வகையில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கீதா ஜீவன் எம்.எல்.ஏ., நியமிக்கப்படுகிறார். திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்படுகிறார்.ஏற்download geethaimages anithaகனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அந்தந்த மாவட்ட செயலாளருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அ.சுப்பிரமணி, விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *