தேவையான உதவிகள் செய்வோம்கத்தாருடனான உறவு தொடரும்=துருக்கி

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அரபு நாடுகள் நிபந்தனைகளை விதித்து உள்ளநிலையில் கத்தாருக்கு தன்னுடைய ஆதரவை அதிபர் எர்டோகன் தெரிவித்து உள்ளார்.அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அரபு நாடுகள் மேற்கொண்டுள்ளன. தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.கத்தார் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால் கத்தார் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே தன் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டை கத்தார் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கத்தாருக்கு ஆரம்பகட்டத்தில் இருந்து ஈரான் மற்றும் துருக்கி தன்னுடைய ஆதரவை தெரிவித்தது. கடும் நெருக்கடி எழுந்த நிலையில் குவைத் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடை செய்தது.இந்த நெருக்கடிக்கு இடையில் பிரச்சனைக்கு தீர்வு காண கத்தாருக்கு அரபு நாடுகள் 13 அசாதாரண நிபந்தனைகளை முன்வைத்தது. அல் ஜசீரா ஊடகத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்று இருந்து.அரபு நாடுகள் விவகாரத்தில் கத்தார் மீது அழுத்தங்கள் ஏற்பட ஆரம்பித்தபோது துருக்கி விரைந்து உதவியதுடன், துருக்கிய படைகளை கத்தாருக்கும் அனுப்ப அனுமதிக்கும் சட்டத்தையும் ஒப்புக் கொண்டது. எனவே கத்தார் துருக்கி ராணுவ தளத்தை மூடவேண்டும் என்று அரபு நாடுகள் நிபந்தனையை வைத்து உள்ளன. பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து கத்தாருக்கு உணவு மற்றும் மற்ற உதவிப்பொருட்களை துருக்கி அனுப்பிவருகிறது. மனிதநேயமற்ற தனிமைப்படுத்துதலால் ஏற்பட்ட விளைவுகளை சமாளிக்க கத்தாருக்கு உதவி செய்வோம் என்றது துருக்கி.
ஏற்கனவே மத்திய கிழக்கில் உள்ள ஆல்-உபெட்டில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானத்தளத்தை கத்தார் அனுமதித்திருக்கிறது. ஆனாலும், அண்டை நாடுகளுடனான பிரச்சனையில் வாஷிங்டன் தனக்கு ஆதரவளிக்காததால், தனது கூட்டாளியான துருக்கியையே கத்தார் தெளிவாக நம்பியிருக்கிறது.கத்தார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளும் நியாமானதோ, நிறைவேற்ற சாத்தியமானதோ அல்ல என்று கூறி கத்தார் நிராகரித்துவிட்டது.இந்நிலையில் கத்தாரில் உள்ள துருக்கி ராணுவ தளத்தை மூட வேண்டும் என்ற அரபு நாடுகளின் நிபந்தனைக்கு துருக்கி பதிலளித்து உள்ளது. அரபு நாடுகள் நிபந்தனைகள் விவகாரத்தில் கத்தாருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ள துருக்கி அதிபர் எர்டோகன், கத்தாரில் எங்களுடைய ராணுவ தளத்தை மூட சொல்வது என்பது அவமானப்படுத்தும் செயலாகும் என கூறிஉள்ளார். சவுதி அரேபியாவிலும் நாங்கள் ராணுவ தளம் அமைக்க அனுமதிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ரியாத் பதிலளிக்கவில்லை. கத்தாரில் இருந்து துருக்கி ராணுவங்களை வெளியேற்றுவது என்பது எங்களை அவமதிக்கும் செயலாகும் என துருக்கி திட்டவட்டமாக கூறிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *