தொடர் மழையால் பீகாரில் கடும் வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நேபாளம், பீகாரில் தொடர் மழையினால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. விபத்து சம்பவங்களில் 41 பேர் பலியாகி உள்ளனர்.அசாம், பீகார், உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. அங்கு மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. பீகாரில் பலத்த மழையால் ஏராளமான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்க ராணுவப்படை, விமானப்படை, தேசிய பேரிடர்வெள்ளம்யினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வெள்ளப்பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட முதல்–மந்திரி நிதிஷ் குமார், மீட்புப்பணிக்கு மேலும் ராணுவப்படைகளை அனுப்புமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டார். மழை, வெள்ளம் சம்பவங்களில் மாநிலத்தில் 41 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.நேபாளம் மற்றும் பீகாரில் கடந்த மூன்று நாட்களாக மழை கொட்டியதால் அங்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. பீகார் மாநில பேரிடர் மீட்பு குழு செயலாளர் பிரத்யாய் அம்ரித் பேசுகையில், வெள்ளம் காரணமாக மாநிலத்தில் இதுவரையில் பீகாரில்-கடும்-வெள்ளம்- உயிரிழந்து உள்ளனர். அராரியாவில் 20 பேரும், கிஷான்காஞ்சில் 5 பேரும், சிதாமார்கியில் 6 பேரும், கிழக்கு சாம்ப்ரான், மேற்கு சாம்ப்ரான், தார்பாங்காவில் தலா மூவரும், மதுபானியில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர் என்றார். அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையே மாநில வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் நாளை கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் 65.37 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என அம்ரித் கூறிஉள்ளார்.
1.82 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 254 முகாம்களில் 48.120 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *