தொண்டர்களை சுமக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஒடிசா எம்.எல்.ஏ.

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தொண்டர்களின் தோள்களில் தொங்கியவாறு சேற்று நீரை கடந்த சம்பவம் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார்.இந்நிலையில், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மல்கன்கிரி தொகுதி எம்.எல்.ஏ. மனாஸ் மத்கமி மற்றும் நபரங்பூர் எம்.பி. பாலபாத்ரா தங்களது மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை நேற்று பார்வையிட்டனர்.இந்த நிகழ்ச்சியின் போது எம்.எல்.ஏ. மத்கமி சேற்று நீரோடை ஒன்றை தனது தொண்டர்களின் உதவுடன் கடந்து சென்றார். இருப்பினும், எம்.பி. எம்.பி. பாலபாத்ரா தொண்டர்களின் உதவியில்லாமல் தானாகவே ஓடையை கடந்தார்.அவரை தொண்டர்கள் 2 பேர் தூக்கிச் சென்று நீரோடையை கடப்பது போன்ற புகைப்படம் நேற்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து எம்.எல்.ஏ. மத்கமி கூறுகையில், ‘நான் தொண்டர்களை கட்டாயப்படுத்தி எதையும் செய்யச் சொல்லவில்லை. என் மீதுள்ள அன்பு மற்றும் பாசத்தால் அவர்கள் இவ்வாறு செய்தனர்’ என்றார்.மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட போது இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *