தோழியை மணம் முடித்தார் லியோனல் மெஸ்ஸி

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி, தமது நீண்ட கால தோழியை திருமணம் செய்து கொண்டார்.அர்ஜெண்டினா நாட்டின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி, தமது சிறு வயது தோழி மற்றும் உறவினரான ஆண்டோனெல்லா ரோக்குஸ்ஸோ ((antonella roccuzzo))என்பவரை காதலித்து வந்தார். 2009 ஆம் ஆண்டு இதை பகிரங்கமாக அறிவித்த மெஸ்ஸி, பின்னர் ரோகுஸ்ஸோவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு வயது மற்றும் நான்கு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரோக்குஸ்ஸோவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக மெஸ்ஸி அண்மையில் அறிவித்தார். இதன்படி இவர்களது திருமணம் மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொஸாரியோவில் ((rosario)) உள்ள நட்சத்திர உணவகத்தில் நேற்று நடந்தது. இதில் கால்பந்தாட்ட வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் என 250 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சக வீரர் நெய்மர், பாப் பாடகி ஷகிரா உள்ளிட்டோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *