நடிகர் திலீப் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

Comments (0) இந்தியா, சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நடிகை பாவனா குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளைத் தெரிவித்ததாக மலையாள நடிகர் திலீப் உள்பட 4 பேர் மீது மகளிர் நல ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான், வெயில், தீபாவளி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர், பாவனா. அவர், கடந்த பிப்ரவரி 17-ந் தேதி இரவு, ஒரு சினிமா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு காரில் திரும்பியபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரிலேயே மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், பாவனா கடத்தல் வழக்கில் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மலையாள நடிகர் திலீப் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக போலீஸாரிடமும் அவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரிடமும், பாவனாவிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.இதனிடையே, பாவனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக திலீப், நடிகர் சலீம் குமார் உள்பட 4 பேர் மீது கேரள மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திலீப் உள்ளிட்டோர் மீது மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பான தகுந்த ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பாவனா கடத்தல் வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள டிஜிபிக்கு மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *