நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்க முடியாது;- நடிகர் ராதாரவி

Comments (0) அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தால் அவரால் ஜொலிக்க முடியாது என்று

கூறியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் அருகே தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:ம.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை தெரிந்து கொண்டுதான் அந்த கட்சி பொதுச்செயலாளர் வைகோ கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை. தமிழகம் முழுவதும் அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தி.மு.க. மற்றும் பிற கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.இது இப்படியே நீடித்தால் கட்சி நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள வைகோ தாய் கட்சியான தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தால் ஜொலிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *