நாடாளுமன்றத்தில் ரூபா

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த சிறை தண்டனைக்கு ஆளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். சசிகலா சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறை அதிகாரி ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபி மற்றும், பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு உண்டானது.இந்நிலையில் சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் உள்பட உயர் அதிகாரிகள் சிறையிலிருந்த சிசிவிடி காட்சிகளை அழித்து வருவதாக ரூபா இரண்டாவது அறிக்கையை அரசுக்கு எழுதினார். இந்த அறிக்கையையும் வெளியானது. இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். மேலும் விசாரணை முடியும்வரை செய்தியாளர்களை ரூபா சந்திக்க கூடாது எனவும் உத்தரவிட்டார். அதையும் மீறி ரூபா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதைத் தொடர்ந்து சிறைத்துறையில் இருந்த டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை அதிகாரியாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். எம்பிக்கள் தர்ணா ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இன்று (18.7.2017) கர்நாடக மாநில பாஜக எம்பிக்கள் ரூபாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பதாகைகளுடன் எம்பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேர்மையான அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். கிரண்பேடி கண்டனம் நேற்று(17.7.2017) புதுச்சேரி துணை நிலை ஆளுனர் ரூபாவின் இடமாற்றத்தைக் கண்டித்து அறிக்கைவிட்டார். அதில், “டி.ஐ.ஜி. ரூபாவை மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறுகளை வெளிக்கொண்டு வருவதைத் தடுப்பது போல நமது சிஸ்டங்கள் இருப்பதை இது காட்டுகிறது. ரூபாவை மாற்றியதற்குப் பதிலாக இந்தப் பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காண வேண்டும் என்பதை இப்போது கவனித்திருக்க வேண்டும். அதற்கான நேரம்தான் இது. ஆனால் வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். ரூபா எந்தப் பதவிக்கு சென்றாலும் இதேபோல தைரியத்தோடும், நம்பிக்கையோடும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கைதிகள் போராட்டம் இந்நிலையில், பெங்களூரு சிறையில் டி.ஐ.ஜி., ரூபாவுக்கு ஆதரவாக ஒரு சில கைதிகளும், கிருஷ்ண குமாருக்கு ஆதரவாக ஒரு சிலகைதிகளும் இன்று காலை உணவைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சிறையில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *