நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், விஜயகாந்த் பேச்சு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் விருப்பம் என்று தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசினார்.தே.மு.தி.க. கட்சி சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவு செயலாளர் எஸ்.எம்.இதயதுல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சையத் சர்வதுல்லா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின்போது விஜயகாந்த் பேசியதாவது,மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர்களின் விருப்பம். உலகில் பெரும்பாலான நாடுகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். அவ்வாறு மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதாக இருந்தால், அனைத்து வகையான இறைச்சிகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்.ஆட்டிறைச்சி சாப்பிடலாம், மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என்பது என்ன சட்டம்?ஓ.பன்னீர்செல்வம் தான் சசிகலா காலில் விழுந்து, அவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தார். முதல்–அமைச்சர் பதவி இல்லை என்றதும் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை தொடங்கியிருக்கிறேன் என்கிறார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் என்கிறார்கள். download (3). மக்களுக்கும், இந்தியாவுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *