நான் குற்றமற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன்;- திலீப்

Comments (0) இந்தியா, சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர், நான் அப்பாவி, எந்த குற்றமும் செய்யவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.கொச்சி ஆனுவா ஜெயிலில் அடைப்பதற்கு கொண்டு செல்லப்படும் முன்பு நடிகர் திலீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பாவனா கடத்தல் சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை.நான் அப்பாவி. என்னை சதி செய்து திட்டமிட்டு இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டனர். நான் குற்றமற்ற வன் என்பதை விரைவில் இந்த உலகுக்கு நிரூபிப்பேன்.எனவே நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மன தைரியத்துடன் எதிர்கொள்வேன்.அவர் சிறையில் இருந்து வெளியேறும் முயற்சியை தொடங்கியுள்ளார். இதற்காக நடிகர் திலீப் தரப்பில் நாளை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.நடிகர் திலீப்புக்கு ஆதர வாக வாதாட பிரபல வக்கீல் ராம்குமார் முன்வந்துள் ளார். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120 (பி)ன் கீழ் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு ஏற்ப ஆவணங் களை தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வக்கீல் ராம்குமார் திட்ட மிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *