நான் தீவிரவாதி இல்லை முன்னாள் நீதிபதி கர்ணன் ஆவேசம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நான் தீவிரவாதி இல்லை என karnan1 கர்ணன் செய்தியார்களிடம் கூறியுள்ளார்.கடந்த 1 மாதமாக கொல்கத்தா போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நீதிபதி கர்ணன் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை போலீசார் மூலம் கொல்கத்தா போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த கொல்கத்தா போலீசார் தமிழக போலீசார் ஒத்துழைப்புடன் கோவையில் பதுங்கி இருந்த ஓய்வுபெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். கோவையில் இருந்து போலீசுடன் செல்ல மறுப்பு தெரிவித்து கர்ணன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இந்நிலையில் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:நான் தீவிரவாதி இல்லை. நீதித்துறையில் ஜாதி, ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதை எதிர்த்து போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.கோவையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது கர்ணன் கைதானார். விமானத்தில் சென்னை அழைத்து வரப்படுகிறார், சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு நாளை அழைத்து செல்லப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *