நிரபராதி என நிரூபிப்பேன் சவால் விடுகிறார் விஜயமல்லையா….

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நிரபராதி என நிரூபிக்க தன்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கடனை கட்டாமல் தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.கிங்பிஷ்ஷர் ஏர்லைன்ஸின் உரிமையாளராக இருந்து வந்த விஜய் மல்லையா வங்களில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தா மல்லையா மீது அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மல்லையா லண்டன் சென்றுவிட்டார். லண்டனில் தங்கியிருந்த அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.இதனையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அவரை கைது செய்தாலும், உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார்.வழக்கு விசாரித்த நீதிபதிகள் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதனால் அன்றைய தினம் மீண்டும் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும். வழக்கின் முடிவில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டால், லண்டன் உள்துறை செயலாளர் 2 மாதங்களுக்குள் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.நீdownload (1)திமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மல்லையா பதில் அளித்தார். அப்போது, என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் குற்றம் ஏதும் செய்யவில்லை, நிரபராதி என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *