நீட் தேர்வில் இருந்து விலக்களிக்குமாறு பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தல்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கமாறு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை திருவொற்றியூரில் மாட்டுச்சந்தை ரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாலத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இதுவரை 61 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றும், தமிழகம் முழுவதும் 85 மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், தமிழக மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *