நீட் தேர்வில் தமிழகத்திற்கு சாதகமாகச் சூழ்நிலை இல்லை;-விஜயபாஸ்கர்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்ட 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்ற ரத்து செய்ததை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்ட நகலும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகஸ்ட் 02 ஆம் தேதி நேற்று சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசின் சார்பில் அவசரச் சட்ட நகல் அளிக்கப்பட்டுள்ளது. காலதாமதம் காரணமாக ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் அவசரச் சட்ட நகல் அளித்துள்ளோம். 85 சதவீத அரசாணையிலும் தமிழகத்திற்கு சாதகமாகச் சூழ்நிலை இல்லை என்பதால் நடப்பு கல்வியாண்டில் விலக்கு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பாண்டில் கலந்தாய்வு நடத்தவேண்டும் என்பதால் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிப்பது எப்படி? என்பது குறித்து சட்டரீதியாக மத்திய அமைச்சர்கள் பரிசீலனை செய்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *