நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.இக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்சநீதிமன்றம், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் வெளியிட சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படும் நீட் தேர்வுகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடத்தப்படவில்லை என்பதால், அதன் முடிவுகளை வெளியிட தடை கோரி, 10 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.தமிழ் வழி மற்றும் குஜராத்தி மொழியில் தேர்வு எளிதாக இருந்ததாகவும், ஆங்கில வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு கடினமாக இருந்ததாகவும் மனுதாரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.இதையடுத்து, 90 புள்ளி ஏழு ஐந்து விழுக்காடு பேர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேர்வு எழுதியதாகவும், 9 புள்ளி இரண்டு ஐந்து விழுக்காடு பேர் மட்டுமே தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, அசாம், ஒரியா, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் தேர்வு எழுதியதாகவும், சி.பி.எஸ்.சி. பதில் மனு தாக்கல் செய்தது.மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, சி.பி.எஸ்.இ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.மேdownloadsuprim cortலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை நீதிமன்றங்கள் நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்று கூறிய உச்சநீதிமன்றம், நீட் தொடர்பான வழக்குகளை மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை நாளை மறுநாள் வெளியிட சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *