நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

8081_Justice_CS_Karnanநீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தினார். இதனால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும் அவருக்கு மனநல சோதனை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி கர்ணன் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து வந்தார். இதனால் ,அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை ரத்துசெய்ய உச்சநீதிமன்றத்தில் 4-வது முறையாக நீதிபதி கர்ணன் கோரிக்கை மனு அளித்திருந்தார். ஆனால் , உச்சநீதி மன்றம் அவரது கோரிக்கை மனுவை நிராகரித்து, 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருப்பதால் அவரை கொல்கத்தா காவல் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *