நேபாள நாட்டின் 40-வது பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு

Comments (0) உலகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

aa-Cover-mo4m25tusuj43pu7hfgplfvpp7-20170607144446.Mediநேபாள நாட்டின் 40-வது பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்படுத்தப்பட்ட அதிகார பகிர்வு ஒப்பந்தத்தின்படி பிரதமர் பிரசண்டா தனது பதவியை கடந்த மாதம் 24-ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள் ளார். 70 வயதான தியூபா, இதற்கு முன்பு மூன்று முறை பிரதமர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *