நோயாளிகள் பலி தடுக்க யாகம் நடத்தும் மருத்துவமனை

Comments (0) இந்தியா, செய்திகள், மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் சில மாதங்களாக பிரசவ வார்டில் பேறுகால உயிரிழப்பு அதிகரித்துவந்ததால், அதைத் தடுக்க பரிகாரமாக மருத்துவர்கள் மிருத்யுஞ்ஜெய யாகம் நடத்தியுள்ளனர். இது குறித்து தெலங்கான அரசு விசாரணை நடத்த நேற்று ஜூலை 27ம் தேதி உத்தரவிட்டுள்ளது.ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கான மாநிலங்களின் தற்போதைய தலைநகரமாக இருந்துவரும் ஐதராபாத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஒரு மருத்துவமனை உள்ளது. மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் பின்னாட்களில் இந்த மருத்துவமனைக்கு காந்தி மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டது. சில மாதங்களாக இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டில் பேறுகால உயிரிழப்பு அதிகரித்துவந்தது. பேறுகால உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் தாய் சேய் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அண்மையில் மருத்துவமனையில் மூத்த மருத்துவர்கள் எல்லாம் சேர்ந்து மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜெய யாகம் நடத்தினர். மருத்துவர்களை நம்பி வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பினிப் பெண்களுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றாமல் மத ரீதியாக மருத்துவர்கள் யாகம் நடத்தியது பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் விமர்சனைத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மருத்துவக் கல்லூரி இயக்குநர் ரமேஷ் ரெட்டி இது குறித்து கூறுகையில், இதை ஊடகங்கள் தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதால் பிரச்னையாகிவிட்டது. இதற்கு ஊடகங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதனால், காந்தி மருத்துவமனையில் மத ரீதியாக யாகம், ஹோமம் பூஜை நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த தெலங்கானா அரசின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளரை விசாரணை நடத்த கேட்டுக்கொண்டுள்ளோம். அது போன்ற செயல்கள் மருத்துவமனையில் நோயாளிகள் வார்டு அருகே எங்கும் நடைபெறவில்லை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.” என்று கூறினார்.மேலும், ரமேஷ் ரெட்டி கூறுகையில் “மருத்துவ மனையின் முன்பு வெளியே இந்த யாகம் நடத்தப்ப ட்டிருக்குமாயின் அது நல்லது. ஆனால், அது பிரசவ வார்டு அருகே நடத்தப்பட்டிருக்குமாயின் நோயாளிகளுக்கு பாதிப்பையும் தொந்தரவையும் ஏற்படுத்தியிருக்கும். அது பிரச்னைக்குரியதுதான்” என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் நரசிம்ம ராவ் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், “அது மாதிரியான நடைமுறை மருத்துவமனையில் ஊக்குவிக்கப்படுவதில்லை. யாகம் நடத்தியது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இது போன்ற செயல்களில் ஈடுபட அனுமதி இல்லை. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே, பேறுகால உயிரிழப்பையும் பச்சிளங் குழந்தைகளின் உயிரிழப்புகளையும் தடுக்காமல் யாகம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்த காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த சில மருத்துவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவ அலுவலர் ஹரி அனுபமா கூறுகையில், “சில செவிலியர்கள், கடைநிலை ஊழியர்கள், சில நோயாளிகள் இவர்களுடன் அந்த நிகழ்வில் நானும் பங்கேற்றேன். நாங்களாகவே பணம் வசூலித்து மருத்துவமனைக்கு வெளியே நடத்தினோம். மருத்துவமனை வார்டுக்குள் நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *