பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் உணவில் மரபணு மாற்றிய பொருட்கள் உள்ளதா? பாக்கெட்டில் குறிப்பிட புதிய விதிகள் வருகிறது

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை பேக்கேஜ்களில் கட்டாயம் குறிப்பிடும் வகையில் விதிமுறைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் உணவுகள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவு தர நிலைகளை உறுதி செய்ய, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில பேக்கேஜ் உணவுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இத்தகைய பொருட்களுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், பேக்கேஜ் உணவுகளில் இவை குறிப்பிடப்படுவதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) மற்றும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு (ஜிஇஏசி), இந்த மாத துவக்கத்தில் ஆலோசனை நடத்தின. தற்போதுள்ள விதிகளின்படி, பதப்படுத்தும் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், அதில் மரபணு மாற்றப்பட்ட பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பேக்கேஜில் குறிப்பிட தேவையில்லை. இதுபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான உணவு பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த போதுமான விதிகள் இல்லை என்று, ஜிஇஏசி கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவிலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை விளைவிக்கப்படுகின்றன. கடந்த மாதம் கூட, மரபணு மாற்றம் செய்த கடுகுகளை பயிர் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல், வன அமைச்சகங்கள் தங்களது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை.சட்டவிதிகளின்படி, மரபணு மாற்றம் செய்த பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிப்பதில்லை என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் குறிப்பிட்டிருந்தார். அப்படி இறக்குமதி செய்வதாக இருந்தால் அவற்றுக்கு எப்எஸ்எஸ்ஏஐ மற்றும் ஜிஇஏசியிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், எஸ்எஸ்எஸ்ஏஐ முதன்மை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறுகையில், ‘‘பதப்படுத்திய உணவுப்பொருட்கள் பலவற்றில் மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அறிந்து கொள்ள நுகர்வோருக்கு உரிமை உண்டு.இத04-1430712867-8foodsaranotfoodsற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்வதில் ஜிஇஏசி ஈடுபட்டுள்ளது. பேக்கேஜ்களில் இவற்றை குறிப்பிடுவது தொடர்பாக புதிய லேபிள் விதிகள் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்படும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *